முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடா(Canada) தொழிலாளர் நலத்திட்டமான CWB மூலம், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், முதலாவது கொடுப்பனவு ஜூலை 12ஆம் திகதி வழங்கப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, ஒக்டோபர் 11 மற்றும் ஜனவரி 10, 2026 ஆகிய திகதிகளில் கூடுதலாக கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.

தகுதியுடையோர்

இந்த நலத்திட்டத்தின் பயனாளர்களில் ஏற்கனவே 2024ஆம் ஆண்டில் இதற்காக பதிவு செய்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Canada Workers Benefit Payment Increase

ஒற்றை நபர்களுக்கான வருடாந்த கொடுப்பனவு அதிகபட்சம் $1,633 ஆகும். குடும்பங்களுக்கு இது $2,813 வரை வழங்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் கூடுதலாக $843 பெறக்கூடிய தகுதியும் பெற்றுள்ளனர்.

இந்த நலத்திட்டத்தின் பயனை பெற, நபர் கனடாவில் ஆண்டுபூராக வசித்து இருக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் 31க்குள் 19 வயது முடித்திருக்க வேண்டும் என்பதுடன் 2024ஆம் ஆண்டில் குறைந்தது $3,000 வரை சம்பாதித்து வேலை செய்திருக்க வேண்டும்.

வருமானம்

கொடுப்பனவு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதால், வரம்பை விட அதிக வருமானம் இருப்பின் கொடுப்பனவு குறைக்கப்படலாம் அல்லது முற்றாக நிறுத்தப்படவும் கூடும்.

கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Canada Workers Benefit Payment Increase

இந்த கொடுப்பனவை பெறுவோர், தங்களது வருமானத் தகவல்களை முழுமையாக சமர்ப்பித்திருக்கிறார்களா, அதேசமயம் அந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், 10 வேலை நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு கனடா வருவாய் நிறுவனத்தை (CRA) தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்