கனடாவில் (Canada) தனியார் துறையில் பணியாற்றுவோருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை கனேடிய அரசு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, கனடாவில் விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது.
அத்துடன், தற்காலிக வேலை செய்வோருக்கும் இந்த ஊதிய உயர்வு பொருந்தும் என்பதால், கனடாவில் கல்வி கற்கும் இந்தியர்கள் உட்பட ஏராளமானோர் இந்த ஊதிய உயர்வால் பலனடையவுள்ளனர்.
ஒரு மணி நேர ஊதியம்
அதன்படி, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள தனியார் துறை நிறுவனங்களில் பணி செய்வோருக்கான குறைந்தபட்ச ஃபெடரல் ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 17.30 கனேடிய டொலர்களிலிருந்து 17.75 டொலர்களாக உயர்கிறது.
இலங்கை மதிப்பில் பார்த்தால், ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம், 3,608.27 ரூபாயிலிருந்து 3,702.13 ரூபாயாக உயர்ந்துள்ளது.
