Home இலங்கை சமூகம் கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு

0

இன்று (26) காலை மஹரகம, பரண வீதியில் உள்ள புடைவைக்கடை ஒன்றின் முன்பாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்(car) ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

மஹரகம தொழிற்சங்க உறுப்பினர்கள் காவல்துறைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

விபத்துக்குள்ளான அடையாளங்கள்

 வாகனம் பல இடங்களில் விபத்துக்குள்ளான அடையாளங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீல நிற KIA கார் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

வாகனத்திற்கு அருகில் பல வெற்று மதுபான போத்தல்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

Source: https://ibctamil.com/article/car-was-found-abandoned-in-front-of-a-cloth-shop-1729954019

NO COMMENTS

Exit mobile version