Home விளையாட்டு 2025 ஐபிஎல் தொடரில் இலங்கை வீரருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்!

2025 ஐபிஎல் தொடரில் இலங்கை வீரருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்!

0

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

அதனைதொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அதில்,  மிகசிறந்த பிடியெடுப்புக்கான விருதை சன்ரைஸஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.

விருது 

ஐபிஎலில் இலங்கை வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தமை பாராட்டுக்களுடன் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது.

அதன்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிக சிறந்த பிடியெடுப்பு என பேசப்பட்டு வருகின்றதுடன், அதற்கு இறுதி விருது வழங்கும் விழாவின் போது அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

விருது வென்றவர்களின் முழு பட்டியல்:

  • சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சூர்யகுமார் யாதவ்
  • செம்மஞ்சள் தொப்பி வென்றவர்(Orange Cap): சாய் சுதர்சன் (759 ஓட்டங்கள்)
  • தொடரின் சிறந்த பிடிப்பு (கேட்ச்) : கமிந்து மெண்டிஸ்
  • ஊதா தொப்பி வென்றவர்(Purple Cap): பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்)
  • ஃபேர்பிளே விருது(Fairplay Award): சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
  • தொடரின் வளர்ந்து வரும் வீரர்: சாய் சுதர்சன் 

NO COMMENTS

Exit mobile version