இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஏனைய வங்கிகளிடமிருந்து கொள்வனவு செய்த டொலர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் வங்கிகளிடம் இருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த ஆண்டு மொத்தமாக மத்திய வங்கி, வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்த டொலர்களின் பெறுமதி 1.87 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் முலீடு
சந்தையின் டொலர் திரவத்தன்மையை பேணுவதற்காக கடந்த ஜுன் மாதம் மத்திய வங்கி டொலர்களை விற்பனை செய்ய நேர்ந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் ஊடாக இலங்கை மத்திய வங்கி வெளிநாடுகளில் அந்தத் தொகையை முதலீடு செய்ய முடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/cbsl-purchased-usd-121-million-from-banks-in-july-1724123423
