போலியான வேலை விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் எந்தவொரு வேலை வாய்ப்புகளையும் மூன்றாம் தரப்பு தளங்களில் இடுகையிட மாட்டோம் என்று வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து உத்தியோகபூர்வ வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ சமூக ஊடக வலைத்தளங்களில் இருந்து மட்டுமே பெற முடியும்.
மத்திய வங்கி
மத்திய வங்கி வேலைவாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேறு எந்த நபரோ அல்லது வலைத்தளமோ அனுமதிக்கப்படவில்லை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள் அதிகம் பகிரப்பட்ட நிலையில், இந்த எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது