Home இலங்கை சமூகம் கொள்ளையர்களால் இளம்பெண் படுகொலை: விசாரணைகள் தீவிரம்

கொள்ளையர்களால் இளம்பெண் படுகொலை: விசாரணைகள் தீவிரம்

0

இரத்தினபுரி – குருவிட்ட, தெவிபஹல பகுதியில் மாலை பறிப்பு சம்பவத்தில் 26 வயது பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஒரு குழு பெண்ணின் கழுத்தில் தாக்கி, அவரது மாலையை பறித்து தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விசாரணை

உயிரிழந்தவர் குருவிட்ட, தெவிபஹல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய குருவிட்ட காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version