Home முக்கியச் செய்திகள் அவுஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது இந்தியா :இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்

அவுஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது இந்தியா :இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்

0

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று(04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 04 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலியாவை  வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டுபாயில் நடைபெற்ற இந்நதப்போட்டியில்.

நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் முடிவில் 264 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டநாயகன் விருது வென்ற கோலி

பின்னர் 265 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் குவித்து வெற்றிபெற்றது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது.விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கும் இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

தென்னாபிரிக்கா – நியூசிலாந்து மோதும் நாளைய போட்டியில் வெல்லும் அணி வரும் 9 ஆம் திகதி டுபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும் .

NO COMMENTS

Exit mobile version