Home இலங்கை குற்றம் இலங்கை – ஊடகவியலாளர் சமுதிதவுக்கு தீவிர பாதுகாப்பு

இலங்கை – ஊடகவியலாளர் சமுதிதவுக்கு தீவிர பாதுகாப்பு

0

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மர்ம கொலைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிரபல ஊடகவியாளாலர் சமுதித சமரவிக்ரமவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சமுதித சமரவிக்ரமவினால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மான முறையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

சில தினங்களுக்கு முன்னர் மித்தெனியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோள் காட்டி, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு சமுதித அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதிபதிகள், குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சமுதித சமரவிக்ரம போன்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version