Home இலங்கை அரசியல் அரசாங்கத்தை மாற்றும் சிந்தனையில் நாங்கள் இல்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு

அரசாங்கத்தை மாற்றும் சிந்தனையில் நாங்கள் இல்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு

0

நாங்கள் அரசாங்கத்துடன் சண்டை பிடித்து, விமர்சனம் செய்து, மாற்றி அமைக்க வேண்டும், என்ற சிந்தனையில் நாங்கள் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(26) ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 அரிசி தட்டுப்பாடு

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மூன்றில் இரண்டு பெரும்பான்மை உடன் இருக்கின்ற அரசாங்கத்தில் அரசியல் தீர்வு
விடயத்தை அடையக்கூடிய வாய்ப்பு உள்ள காரணத்தினால் அதனை நாங்கள்
சாதகமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.

எனினும், எமது மக்கள் முகம் கொடுக்கும்
பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் பேசாமல் இருக்க முடியாது.

நாட்டிலே அரிசி தட்டுப்பாடு வந்த போது சதோச விற்பனை
நிலையங்கள் ஊடாக 210 ரூபாவுக்கு அரசியும், 130 ரூபாவுக்கு தேங்காயும் கொள்வனவு
செய்யலாம் என  ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதனை கொள்வனவும் செய்யலாம். ஆனால் எமது
பிரதேசத்தில் ஒரு சதோச விற்பனை நிலையம்கூட இல்லை.

விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு 

மட்டக்களப்பு நகரில்
மாத்திரம் ஒரே ஒரு சதோச விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

அந்த விற்பனை
நிலையத்தை கூட மூடுவதும் திறப்பதுமாக காணப்படுகிறது.

அங்கு பொருட்களும் இல்லை. களுவாஞ்சிகுடி
பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள சதோச விற்பனை
நிலையத்துக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாது.

தற்போது அரிசி தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளது. அது விவசாயிகள்
மத்தியில் பெரிய பிரச்சினையாக வந்துள்ளது. அரசாங்கம் அரிசி இறக்குமதி
செய்கின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம் என
கூறினார்கள். ஒரு ஹெக்டருக்கு ஒரு இலட்சம் என்றார்கள்.

அந்த இழப்பீட்டுத்
தொகையும் விவசாயிகள் பயிர் மீண்டும் பயிர் செய்து மூன்றாவது உரம் இடும்
காலப்பகுதியில்தான் வழங்கப்படும்.

இந்த சூழ்நிலையில்தான் தற்போது
அரசாங்கத்தின் நிலைமை சென்று கொண்டிருக்கிறது”

ஆனால் இந்த கூட்டுறவு சங்கங்களை மென்மேலும் பலப்படுத்தினால் அரிசி பிரச்சினைகள் போன்ற விடயங்கள்
எழும்போது எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க
முடியும். என்றார்.

NO COMMENTS

Exit mobile version