Home இலங்கை அரசியல் இலங்கையின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை

இலங்கையின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை

0

இலங்கையின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை
தாக்கல் செய்ய, லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும்
ஆணைக்குழு, நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பின் ஆங்கில இதழ் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

நிதி முறைகேடு

நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் கேள்விப்பத்திர சபையின் தலைவராக
பணியாற்றியபோது இடம்பெற்றதாக கூறப்படும்; நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது .

இதன்போது எட்டு மில்லியன் ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version