Home இலங்கை சமூகம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன் நள்ளிரவில் ஆரம்பமான போராட்டம்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன் நள்ளிரவில் ஆரம்பமான போராட்டம்

0

யாழ்ப்பாணம்(Jaffna) – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள
கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இன்று(08.07.2024) காலை 8 மணியளவில் ஆரம்பமாக தீர்மானித்திருந்த குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/chavagacherry-hospital-protest-1720381956

NO COMMENTS

Exit mobile version