Home இலங்கை சமூகம் தோண்ட தோண்ட வரும் பிணக்குவியல் – இன்று செம்மணி புதைகுழி வழக்கு

தோண்ட தோண்ட வரும் பிணக்குவியல் – இன்று செம்மணி புதைகுழி வழக்கு

0

அரியாலை (செம்மணி அருகே) சித்துப்பாத்தி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. 

மேலும் கடந்த 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை தொடர்பான அறிக்கை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரியாலை மனிதப் புதைகுழி

அரியாலை மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக தொடர்ந்த
அகழ்வில் இதுவரை 147 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இவற்றில் 133 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில் 3ஆம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

இதேவேளை, அரியாலை சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம் என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இறந்த நிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது. சிலரின் கை கால்கள் முறுக்கப்பட்டிருந்தன என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்

NO COMMENTS

Exit mobile version