Home இலங்கை சமூகம் செம்மணியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

செம்மணியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

0

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிடவுள்ளது. 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அகழ்வு நடவடிக்கைகள் 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version