Home இலங்கை பொருளாதாரம் கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இல்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெட் வரி

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றின் போதே அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரி குறைக்கப்பட்டால் இறைச்சி சார்ந்த உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/chicken-price-in-sri-lanka-1736090795

NO COMMENTS

Exit mobile version