Home இந்தியா உற்று நோக்கும் தமிழகம் – உச்சக்கட்ட பாதுகாப்பு: கரூர் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்

உற்று நோக்கும் தமிழகம் – உச்சக்கட்ட பாதுகாப்பு: கரூர் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்

0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் செல்லும் வழிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தீவிர மோப்ப நாய் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

முதன்முறையாக கரூர்

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் இன்று கரூர் செல்கிறார்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விதித்துள்ளார்.

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி 

அதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையைத் தாண்டி யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தகுதியுள்ளவர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டுவைத்திருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்குள் நுழைய முடியும்.

இந்தச் சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரூரில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரச பணி வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.youtube.com/embed/XJiPvA4r2vo

Source: https://ibctamil.com/article/chief-minister-vijay-to-visit-karur-today-1783658631

NO COMMENTS

Exit mobile version