Home சினிமா குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்த பரத் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?… வைரல் போட்டோ

குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்த பரத் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?… வைரல் போட்டோ

0

குழந்தை நட்சத்திரம்

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள், அன்ஸீன் போட்டோஸ், குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்களின் தற்போதைய புகைப்படங்கள் என நிறைய இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகிறது.

அப்படி சன் தொலைக்காட்சியில் கடந்த 2004ம் ஆண்டு ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் தான் மாஸ்டர் பரத்.

இந்த சீரியலுக்கு முன் இவர் 2002ம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான நைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் பஞ்ச தந்திரம், போக்கிரி, வியாபாரி, சிலம்பாட்டம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். கடைசியாக அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்திருந்தார்.

பல்லவன் அம்மா பற்றி நிலா சொன்ன விஷயம், ஆடிப்போன நடேசன்… அய்யனார் துணை புரொமோ

போட்டோ

ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற இவர் தமிழில் இப்போது நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் படங்கள் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான விஸ்வம் என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

NO COMMENTS

Exit mobile version