Home இலங்கை சமூகம் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை !

நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை !

0

கந்தானை காவல் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு (Colombo0 09 தெமட்டகொட (Dematagoda) பகுதியில் வசித்து வந்த ஐந்து வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதேச வைத்தியசாலை

இதையடுத்து, குழந்தையை ஜாஎல (Ja-Ela) பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ராகம (
Ragama)  வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/child-dies-after-drowning-in-swimming-pool-1719731878

NO COMMENTS

Exit mobile version