கண்டி – கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (17) இடம்பெற்றுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டினுள் தீ பரவல்
சம்பவத்தில் 9 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று வீட்டினுள் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது வீட்டினுள் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
