Home இலங்கை சமூகம் இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமன்றம் திறந்து வைப்பு

இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமன்றம் திறந்து வைப்பு

0

கிளிநொச்சி (Kilinochchi) நீதிமன்ற வளாகத்தில் சிறுவர்களுக்கான நீதிமன்றம் இன்று (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமன்றமாக கிளிநொச்சியில் இந்நீதிமன்றம் அமைந்துள்ளது. 

முதலாவது நீதிமன்றம் பத்தரமுல்லையிலும் இரண்டாவது நீதிமன்றம்
யாழ்ப்பாணத்திலும் உள்ள நிலையில் மூன்றாவதாக கிளிநொச்சியில் இன்று (06) திறந்து
வைக்கப்பட்டிருக்கின்றது. 

கலந்து கொண்டோர் 

மேற்படி நிகழ்வில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி கிறேசியன் அலெக்ஸ் ராஜா, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சைலன் காயத்திரி, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மத் ஜமில் மற்றும் சிறுவர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் நிஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மாவட்ட சிறுவர்
நன்னடத்தை உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version