சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் வருடா வருடம் ஒக்டோபர் 01ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் (Jaffna) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்றையதினம் (01) ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக நீதி கோரி கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிட்த்தக்கது.
வவுனியா
சர்வதேச சிறுவர்தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியாவிலும் (Vavuniya) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் இலங்கையில் எத்தனையோ சிறுவர் அமைப்புக்கள் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட எமது குழந்தைகளுக்கான நீதிப்பொறிமுறையினை ஒருவரும் ஏற்ப்படுத்தி தரவில்லை.
எனவே நாம் சர்வதேச நீதிகோரி எமது போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். இந்நிலையில் எமது போராட்டங்களை குழப்பும் விதமாக சில விசமிகள் திட்டமிட்டு
செயற்ப்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும்வரை நாம் இந்த போராட்டங்களை கைவிடப்போவதில்லை என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்குழந்தைகள் பயங்கரவாதிகளா,சிறுவர்தினம் நீதி தேடும் தினம், பச்சிளம் குழந்தைகள் ஆயுதம் ஏந்தினரா போன்ற வாசகங்கள்
தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் (Kilinochchi) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம் (01) காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும், சிறு பிள்ளைகளாக இருந்த நிலையில் பெற்றோர்களாக கையளிக்கட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
https://www.youtube.com/embed/HC7liB_CwqA