Home இலங்கை குற்றம் மனைவியின் மீது சந்தேகம்! தீ வைத்துக் கொளுத்திய கணவன்

மனைவியின் மீது சந்தேகம்! தீ வைத்துக் கொளுத்திய கணவன்

0

சிலாபம் – அம்பகண்டவில பகுதியில், கணவன்  ஒருவர் தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கடுமையான காயங்களுக்கு உள்ளான மனைவி சிலாபம் வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(11) உயிரிழந்துள்ளார். 

கணவன் கைது 

தனது மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் கொண்ட கணவர் இவ்வாறு மனைவியை தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், குறித்த கணவர் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/chillaw-murder-case-investigation-1749707314

NO COMMENTS

Exit mobile version