முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவை ஆளும் சீனா! தீவிரமடையும் சர்ச்சைகள்

இந்தியாவின் (India) அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது.

இதன்படி, 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா (China) புதிய பெயர் சூட்டியுள்ளது.

கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” (Zangnan) பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.  

சீன ஆளுகை

இதற்கமைய, ஏற்கனவே கடந்த 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருந்தது. 

china releases fourth list of names for arunachal pradesh india

இலங்கைக்கான இலவச விசா! சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கான இலவச விசா! சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

இந்த நிலையில், தற்போது நான்காவது முறையாகவும் அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது.

இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளது. 

உரிமை மாறாது

இந்த நிலையில், இடத்தின் பெயரை மாற்றுவதால் மாத்திரம் அதன் உரிமை மாறிவிடாது என  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார். 

அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என அவர் கூறியுள்ளார்.

china releases fourth list of names for arunachal pradesh india foreign minister jaishankar

அபாயகரமான பொருட்களுடன் இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல்!

அபாயகரமான பொருட்களுடன் இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல்!

  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்