Home இலங்கை அரசியல் இலங்கையில் சீனாவின் அரசியல் ஆட்டத்திற்கு வித்திட்ட அநுரவின் இந்திய விஜயம் !

இலங்கையில் சீனாவின் அரசியல் ஆட்டத்திற்கு வித்திட்ட அநுரவின் இந்திய விஜயம் !

0

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றிருந்தார்.

குறித்த அரசியல் பயணமானது சர்வதேச அளவில் மிகவும் பேசு பொருளாக காணப்பட்டதுடன் இது பொருளாதார அளவில் இலங்கைக்கு ஒரு மாற்றத்தின் அடித்தளமாகவும் விளங்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேற்படி இந்திய பயணம்,

  1. இலங்கையில் இந்திய முதலீட்டின் பாதுகாப்பு
  2. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கை
  3. இலங்கை மாகாண சபை தேர்தல் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம்.
  4. இந்திய – இலங்கை கடற்றொழிலாலர் பிரச்சினை ஆகிவை தொடர்பில் கலந்துரையாடவே மேற்கொள்ளப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்திய அரசாங்கம் குறித்த விடயங்களில் தனது பக்கம் குறித்தே அதிக கவனம் செலுத்திய நிலையில் இலங்கை மீதான ஈடுபாடு குறித்து கருத்தில் கொள்ளாததாகவும் அரசியல் வட்டாரங்கள் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தின.

இந்தநிலையில், இது தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான ஜோதிலிங்கம் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய களம் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/TckSTl3lx_U

NO COMMENTS

Exit mobile version