Home இலங்கை குற்றம் கொழும்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்

கொழும்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்

0

கொழும்பில் மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாக கூறி 1.5 மில்லியன் ரூபாய் பணத்தையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறி 191,600 ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக சீனப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு மோசடி புலனாய்வு பணியக அதிகாரிகள், சந்தேகநபரான பெண்ணை கைது செய்தனர்.

மோசடி

கைது செய்யப்பட்ட பெண் 54 வயதுடைய சீன நாட்டவராகும். மோசடி தொடர்பில் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Source: https://tamilwin.com/article/chinese-woman-arrested-in-sri-lanka-1749102697

NO COMMENTS

Exit mobile version