Home சினிமா பாரதி கண்ணம்மா-னு டைட்டில் மாத்திடுங்க.. சின்ன மருமகள் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பாரதி கண்ணம்மா-னு டைட்டில் மாத்திடுங்க.. சின்ன மருமகள் சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

0

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலில் தமிழ்செல்வி கர்ப்பமாக இல்லை என்கிற உண்மையை அவரே எல்லோரிடமும் போட்டு உடைத்துவிட்டார். அதன் பிறகு கணவர் சேது அவரை வார்த்தைகளால் கடுமையாக காயப்படுத்துகிறார்.

அதனால் அவருடன் உறவு முடிந்துவிட்டது என சொல்லிவிட்டு தமிழ்செல்வி அம்மா வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

ப்ரோமோ

அதன் பிறகு அவரது அப்பாவும் சம்மந்தி பெயரை சொல்லி அதிகம் கடன் வாங்கி இருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. அதனால் அப்பாவையும் தூ.. என துப்புகிறார்.
அதன் பின் படித்து டாக்டர் ஆகி லட்சியத்தை அடைய போவதாக சவால் விடுகிறார் தமிழ்செல்வி. இது தற்போது வெளியாகி இருக்கும் சின்ன மருமகள் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் ‘பாரதி கண்ணம்மா கதை போல இருக்கே. டைட்டிலை மாத்திடுங்க’ என கமெண்டில் கலாய்த்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version