சமூக நலனை அடிப்படையாகக்கொண்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றபோது, அந்தச் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பாராமல், செய்தியை வெளியிடுகின்ற ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தாக்குகின்ற வழக்கம் சிலருக்கு நெடுநாட்களாக இருந்துவருகின்றது.
சமூக வலைத்தளங்களின் வருகையைத் தொடர்ந்து, ஊடகங்கள் மீது காழ்ப்புணர்வை வெளிக்காண்பிக்கின்ற ‘போஸ்டுக்களை’ பதிவிட்டுவிட்டு, செய்தியின் உண்மைத்தன்மையை திசைமாற்றிவிடும் செயலை சிலர் இலகுவாகவே செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்கின்றார்கள்.
வெளியான செய்தி
அண்மையில் தமிழ்வின் இணையத்தளத்தில் ‘தம்பிராசாவை தேடும் புலனாய்வுப்பிரிவு : பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
பொலிஸாரிடம் உறுதிப்படுத்தப்பட்டு, எமது ஊடகவியலாளர்களால் அவரது அயலில் உள்ளவர்களிடம் விசாரிக்கப்பட்டு பதிவேற்றப்பட்ட செய்தி.
இப்பொழுதுவரைக்கும் தலைமறைவாகவே இருந்துவரும் தவராசா, தான் பொலிஸாரினால் தேடப்பட்டுவருவதாக வெளியான செய்தி ‘பொய்யான தகவல்’ என்றும், ‘தமிழ்வின் இணையத்தளம் தேசியப் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்டுவருவதாகவும்’ தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவை இட்டிருக்கின்றார்.
தவராசா என்பவருக்கு எதிராக, நீதி நிர்வாக சட்டத்தின் 84ஆவது பிரிவின் கீழ், கொலை மற்றும் திட்டமிடல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு, நீதிபதியினால் 31.05.2024ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளோம்.
எங்களது செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவும், இலங்கை நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பதோ அல்லது அவர் தொடர்பான தகவல்களை மறைத்துவைப்பதோ தண்டணைக்குரிய குற்றம் என்கின்றதன் அடிப்படையிலும், பிடியானையின் பிரதியை இங்கு இணைத்துள்ளோம்.
தம்பிராசா தொடர்பாக தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தியைப் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்