Home இலங்கை அரசியல் ஜனாதிபதி நிதிய மோசடி குறித்து சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதிய மோசடி குறித்து சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

0

ஜனாதிபதி நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.    

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக “பொது பணத்தை பாதுகாக்கும் சட்டத்தரணிகள்” அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இந்நிலையில், குறித்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

முறைப்பாடு 

மேலும், ஜனாதிபதி நிதிச் சட்டத்தில் நிதியின் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பது குறித்து தெளிவான உத்தரவுகள் உள்ளன. 

எனவே, அந்த உத்தரவுக்கு புறம்பாக பணம் செலவிடப்பட்டுள்ளதனால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version