முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தரமற்ற மருந்து இறக்குமதி : சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் சி.ஐ.டி வாக்குமூலம்

இலங்கைக்கு தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோக திணைக்களத்தின் பிரதிநிதிகள் பலரிடம் இவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்தார்.

குறித்த இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் முன்னாள் எம்பி வெளியிட்ட தகவல்

சேமித்து வைக்கப்பட்டுள்ள மருந்துகள்

இதேவேளை, வத்தளை, வெலிசறை மற்றும் களனி ஆகிய பகுதிகளிலுள்ள கொள்கலன் முனையங்களில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தரமற்ற மருந்து இறக்குமதி : சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் சி.ஐ.டி வாக்குமூலம் | Cid Statement To High Officers Of Health Sector

அத்துடன், அந்த கொள்கலன்களில் இருப்பதாக கூறப்படும் “மெரபனம்” என்ற வலிமையான நுண்ணுயிர் எதிர்ப்பியின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

களனி, வெலிசறை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள முனையங்களில் இந்த மருந்து கொள்கலன்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறாக சுமார் 20 கொள்கலன்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

சமல் சஞ்சீவ கோரிக்கை

பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்ட மருந்து கொள்கலனில் “மெரபனம்” என்ற நுண்ணுயில் எதிர்ப்பி தடுப்பூசியின் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் குப்பிகள் உள்ளன. இந்த தடுப்பூசி இருதய நோயாளர்கள் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்து இறக்குமதி : சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் சி.ஐ.டி வாக்குமூலம் | Cid Statement To High Officers Of Health Sector

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மருந்துகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ கோரிக்கையொன்றையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இன்று முதல் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

மீண்டும் இன்று முதல் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்