Home இலங்கை குற்றம் ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்! தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்! தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு

0

இத்தாலியின் நேபிள்ஸில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவையில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான பெண்ணின் மூன்று பிள்ளைகள் இத்தாலியில் உள்ளனர்.

அவர்களில் இருவருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது மாரவிலாவை சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு

அதற்கு பழி வாங்கும் நோக்கிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இத்தாலியில் நடந்துள்ளது. இது தொடர்பாக நேபிள்ஸ் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாரவில பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version