Home இலங்கை சமூகம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட துாய்மையான இலங்கை வேலைத்திட்டம்

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட துாய்மையான இலங்கை வேலைத்திட்டம்

0

துாய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை
பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்றையதினம்(02.02.2025) இடம்பெற்றுள்ளது.

உடுத்துறை கடற்கரை பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருதங்கேணி பொலிஸார்
உடுத்துறை 10ஆம் வட்டார கடற்றொழிலாளர் சங்கத்துடன் இணைந்து துப்பரவு பணியை
மேற்கொண்டனர்.

துப்பரவு பணி

இந்நிகழ்வில், மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி U.M.J.W.K
அமரசிங்க, உடுத்துறை கடற்றொழிலாளர் சங்க தலைவர் கணேஸ்வரன், வடமராட்சி கிழக்கு
சமாச தலைவர் தங்கரூபன், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version