Home இலங்கை சமூகம் சீரற்ற வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீரற்ற வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மறு அறிவித்தல்

குறித்த பகுதிகளில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றானது மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/climate-change-warning-for-the-public-1727657551

NO COMMENTS

Exit mobile version