Home இலங்கை சமூகம் மாவீரர் நாளில் வடக்கில் கடையடைப்பு: விடுக்கப்பட்ட கோரிக்கை!

மாவீரர் நாளில் வடக்கில் கடையடைப்பு: விடுக்கப்பட்ட கோரிக்கை!

0

மாவீரர் தினம் நாளை (27.11.2025) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2 மணியுடன் மூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, கடை உரிமையாளர் ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சந்திப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

குறித்த கோரிக்கை நேரில் சந்தித்து எழுத்துமூலமாக முன்வைக்கப்பட்டது.

அவர்கள் இது தொடர்பில் சாதகமான வாக்குறுதிகளை தந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் நாளைய தினம் (27.11.2025) அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மஞ்சள் சிவப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version