Home இந்தியா இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

0

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார்.

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அத்துடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி 

இயக்குநர் பாரதிராஜா சாதனை, கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அவருடன் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை சுகாஷினி, நடிகர்கள் சிவக்குமார் சூர்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.  

Source: https://ibctamil.com/article/cm-vijay-pays-tribute-to-director-bharathiraja-1781071644

NO COMMENTS

Exit mobile version