Home இலங்கை சமூகம் வட மாகாண சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பில் கலந்துரையாடல்

வட மாகாண சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பில் கலந்துரையாடல்

0

புதிய இணைப்பு

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (17.2.2025) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது

இதன்போது சிறுதானியத்தை பயிரிடுவதற்கு ஊக்குவித்தல், கால்நடைகளை கட்டுப்படுத்தல், சட்டவிரோத கிருமிநாசினி பயன்படுத்துவதை தடுத்தல், உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

முதலாம் இணைப்பு

வட மாகாணத்தில் 16,000 புதிய ஏக்கர் தென்னை தோட்டங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 மேலும் நாட்டின் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் தேங்காய்க்கு உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.youtube.com/embed/oidUcYG2IQs

NO COMMENTS

Exit mobile version