Home இலங்கை சமூகம் பாரிய விபத்தை தவிர்த்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி

பாரிய விபத்தை தவிர்த்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி

0

கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரிய விபத்தில் சிக்கவிருந்த நிலையில் அதனை தடுத்து 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இடங்கொட கலத்துர வீதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாரிய பள்ளத்தில் விழ முற்பட்ட வேளை சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டது.

நேற்று (13) காலை கலவானையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.

விபத்தை தடுத்த சாரதி

வீதியின் ஓரத்தில் இருந்த மதிலை நோக்கி பேருந்தை திருப்பி, ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதி தடுத்துள்ளார்.

வீதியின் மறுபுறம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் விபத்து ஏற்பட்டிருந்தால், பல மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதி சேறும் சகதியுமாக இருப்பதால் பல வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/colombo-bus-service-driver-save-40-passengers-life-1718348297

NO COMMENTS

Exit mobile version