இரகசிய வாக்கெடுப்பு மூலம் மேயர் தெரிவு இடம்பெற்றமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் தெரிவித்துள்ளார்.
மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இரகசிய வாக்கெடுப்பு அல்லது திறந்த வாக்கெடுப்பு ஆகிய இரண்டு முறைகளில் மேயரை தெரிவு செய்ய முடியும்.
அதிகாரத்தை கைப்பற்றுவோம்
எனினும், இரகசிய வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு எங்களிடம் கூறப்பட்டவுடனேயே எங்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டன.

எனினும், நாம் எதிர்காலத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

