Home இலங்கை குற்றம் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் கொழும்பில் சிக்கிய இளம் பெண்

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் கொழும்பில் சிக்கிய இளம் பெண்

0

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொலமன் பீரிஸ் மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியிலிருந்து உரிமையாளர் உட்பட இருவர் நேற்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கல்கிசை பொலிஸார் விசாரணை

கும்புரேகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய உரிமையாளரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source: https://tamilwin.com/article/colombo-nuwaraeliya-young-girl-arrest-1728136655

NO COMMENTS

Exit mobile version