Home இலங்கை சமூகம் யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

0

வடக்கு மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், வடக்கு தொடருந்து வழித்தடம் முழுமையாக சேவைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அதனைக் குறிப்பிட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு

‘யாழ் தேவி’ தொடருந்து சேவை இன்று முதல் கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை  இடையே வடக்கு தொடருந்து வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

அந்தவகையில், ‘யாழ் தேவி’ தொடருந்து சேவை குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் வழங்கப்படும் என்றும் இலங்கை தொடருந்து தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version