Home இலங்கை சமூகம் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்

வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்

0

தமிழினத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் வவுனியாவில் (Vavuniya) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாநகரசபை வாயிலில்
அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று (18) காலை நினைவு தினம் அனுஸ்டிக்கபட்டது.

இதன்போது திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு, ஈகைசுடர்
ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அதன்
முக்கியஸ்தர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா
மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை
உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி
நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 25ஆம் திகதி
காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக
ஏற்ப்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version