Home இலங்கை சமூகம் அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ளும் பயணிகள்

அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ளும் பயணிகள்

0

மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில்
நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும்
காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.

பொதுவாக அதிவேக வீதியில், வீதியோரத்தில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவது
குற்றமாகும்.

அத்துடன் வாகனங்களில் பயணிப்போரும் வீதிகளில் இறங்குவது சட்டவிரோதமாகும்.

காணொளிக் காட்சிகள்

எனினும், மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள், அதிவேக வீதியின் ஓரத்தில் தமது
பேருந்துகளை நிறுத்தி உணவு உட்கொள்வது, அதிவேக வீதிகளில் குறிப்பிடத்தக்க
ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காணொளிக் காட்சிகள் தொடர்பில் பொலிஸார் இன்னும் பதிலளிக்கவில்லை. குறித்த காணொளியை காண Linkஐ அழுத்தவும்.

NO COMMENTS

Exit mobile version