முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு: இராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்ட தகவல்

மலையக மக்கள் முன்னணியின் தேசிய மாநாடும் 35ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அக் கட்சியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் கட்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி 1989ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் ஸ்தாபிக்கப்பட்டது.

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

கட்சியின் வரலாறு

மலையகத் தேசியம் மற்றும் உரிமை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள்
முன்னணியை ஆரம்பத்திலேயே ஓரம் கட்டுவதற்காக பலரும் செயற்பட்டு வந்துள்ளார்கள்.

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு: இராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்ட தகவல் | Conference Of Malayaga Makkal Munnani

இந்நிலையில், தனது விடாமுயற்சியின் பயனாகவும் அன்று அவருடன் இணைந்திருந்த
இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளாலும் மலையகத்தின் ஒரு மாற்றுக் கட்சியாக
மலையக மக்கள் முன்னணி உருவெடுத்தது.

யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்த மலையக மக்கள் முன்னணி
இலங்கை அரசியல் வரலாற்றில் 1994ஆம் ஆண்டு ஓர் அரசைத் தீர்மானிக்கின்ற
சக்தியாக அரசியலில் வளர்ந்தது.

“நான் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்பு அமரர் சந்திரசேகரனின் வழியில் இந்தக்
கட்சிக்கு தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. எனவே,
மலையக மக்கள் முன்னணிக்கென ஒரு சரித்திரம் இருக்கின்றது.

கட்சியின் மைல்கல்

கடந்த பல வருடங்களாக
மாநாட்டை நடத்த முடியாத நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டை
மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று
இராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு: இராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்ட தகவல் | Conference Of Malayaga Makkal Munnani

மேலும், இந்த மாநட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில்
இருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கெடுக்கவுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் தமிழ்
நாட்டில் இருந்து மேடைப் பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது, மலையக மக்கள் முன்னணிக்காகவும் அதன் முன்னேற்றத்துக்காகவும்
செயற்பட்டவர்களுடன் மலையகத்துக்குப் பெருமை சேர்த்தவர்களும் பலரும்
கௌரவிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், இந்த மாநாடானது மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்றும்
இராதாகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார். 

சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: எம்.பியானார் ஜகத் பிரியங்கர

சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: எம்.பியானார் ஜகத் பிரியங்கர

கெஹெலியவை பார்வையிட படையெடுக்கும் மொட்டுக் கட்சியினர்

கெஹெலியவை பார்வையிட படையெடுக்கும் மொட்டுக் கட்சியினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்