Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்ட நபர் சடலமாக மீட்பு!

தமிழர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்ட நபர் சடலமாக மீட்பு!

0

கிளிநொச்சி (Kilinochchi) – இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்
ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (23) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம்
மாடியில் நேற்று (22) இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில்
ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.

காவல்துறையினர் விசாரணை

மற்றைய நபர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும்
அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என
காவல்துறையினருக்கு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையைச் சேர்ந்த 34வயதுடைய சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின்
தந்தையே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

Source: https://ibctamil.com/article/construction-worker-dead-body-recovered-kilinochi-1724400348

NO COMMENTS

Exit mobile version