கொழும்பு துறைமுகத்தில் உள்ள CICT யார்டில் நடந்த விபத்தில் ஒரு கொள்கலன் லொறி சாரதி உயிரிழந்துள்ளார்.
அவர் ஒரு கொள்கலன் லொறியில் இருந்து ஒரு கொள்கலனை ஏற்றிச் சென்றபோது அந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கொள்கலன் லொறி மீது விழுந்ததாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயம்
பின்னர் அவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்வபத்தில் உயிரிழந்த நபர் மீகொட பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
