தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தசையை வளர்க்கும் உணவுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு இவை முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாற்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே சிறுநீரக நோய்களுக்கான நிபுணர் அனுபமா டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
இதேவேளை, இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
49 வகையான அழகுசாதன பொருட்கள் பயன்படுத்த பொருத்தமற்ற அளவில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
