Home இலங்கை குற்றம் குடும்பம் ஒன்றின் ஆடம்பர வீடு அதிரடியாக பறிமுதல் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

குடும்பம் ஒன்றின் ஆடம்பர வீடு அதிரடியாக பறிமுதல் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0

மாத்தளை, கிரிமெட்டியாவ பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதுடைய ஆண் ஒருவரும், 46 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது அவர்களிடம், 05 கிராம் 567 மில்லிகிராம் ஹெராயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டது.

அதற்கமைய அவர்கள் வசிக்கும் கிரிமெட்டியாவ பகுதியில் வீட்டில் 3 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டது.

சொத்து பறிமுதல் உத்தரவு

சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தின் மூலம் ஆடம்பர வீடும் கட்டப்பட்டமை விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதற்கமைய, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் அந்த வீடு தொடர்பாக சொத்து பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version