முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலுக்கான போர் விமான பாகங்கள் ஏற்றுமதி : நெதர்லாந்துக்கு நீதிமன்றம் தடை

காசாவில் இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கான எப்-35 போர் விமான பாகங்களின் அனைத்து ஏற்றுமதிகளையும் நிறுத்த வேண்டும் என நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நெதர்லாந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை ஏற்றுமதி செய்யப்பட்ட எப்-35 போர் விமானங்களின் பாகங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான யுத்த மீறல்களில் பயன்படுத்தப்பட்டன. என்பதை மறுக்க முடியாது என்று நீதிபதி பாஸ் போலே தீர்ப்பில் கூறினார்.

அத்துடன் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி போதுமான அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும்  நீதிமன்றம் தெரிவித்தது.

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

நெதர்லாந்து அரசாங்கம் 

இந்த தீர்ப்பை நிறைவேற்றிய ஏழு நாட்களுக்குள் நெதர்லாந்து அரசாங்கம் இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று ஹேக்கில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியது.

இஸ்ரேலுக்கான போர் விமான பாகங்கள் ஏற்றுமதி : நெதர்லாந்துக்கு நீதிமன்றம் தடை | Court Bans Export F35 Fighter Jet Parts To Israel

எவ்வாறாயினும், இந்த உத்தரவை எதிர்த்து நெதர்லாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம்

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம்

போர் விமானத்தின் பாகங்கள்

Oxfam’s Dutch affiliate, PAX மற்றும் The Rights Forum ஆகிய மூன்று மனித உரிமை குழுக்களால் கடந்த ஆண்டு நெதர்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இஸ்ரேலுக்கான போர் விமான பாகங்கள் ஏற்றுமதி : நெதர்லாந்துக்கு நீதிமன்றம் தடை | Court Bans Export F35 Fighter Jet Parts To Israel

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் செய்யும் போர்க் குற்றங்களுக்கு நெதர்லாந்து உடந்தையாக இருக்கும் என்பதால், போர் விமானத்தின் பாகங்களை வழங்குவதால், ஏற்றுமதி உரிமத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என அந்த குழுக்கள் வாதிட்டன.

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம்

நியூயோர்க் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ஐவர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்