முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கோரிக்கை நிறைவேற்றம்

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு(Jerome Fernando) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு நேற்று(03.04.2024) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

இதன்போது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெரோம் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கோரிக்கை நிறைவேற்றம் | Court Order Regarding Jerome Fernando

இது தொடர்பில் பரிசீலித்த நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காரணமாக அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுவருடம் பிறக்கும் சரியான நேரம்! முடிவிற்கு வந்த குழப்பநிலை

புதுவருடம் பிறக்கும் சரியான நேரம்! முடிவிற்கு வந்த குழப்பநிலை

பிள்ளையானின் மூன்று கோடி ரூபாய் வீட்டு விவகாரம்

பிள்ளையானின் மூன்று கோடி ரூபாய் வீட்டு விவகாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்