Home இலங்கை அரசியல் பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அடிப்படை உரிமைகள் 

இந்நிலையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றில் பிள்ளையான் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதியரசர்களான மகிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்து அறிவித்தது.

NO COMMENTS

Exit mobile version