Home இலங்கை சமூகம் கோவிட் அச்சுறுத்தல்: அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கோவிட் அச்சுறுத்தல்: அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

0

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை
முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேல்மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமாரவின் அதிகாரப்பூர்வ
சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம்

இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அத்துடன், கொரோனா தொற்று தொடர்பில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாலும், பொது
சுகாதாரத்தைப் பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று,
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version